தொற்று உறுதியானவர்களின் மொத்த எண்ணிக்கை 4 இலட்சத்தை கடந்தது

4 coronavirus1 1584949824 1585047469 1585392952
4 coronavirus1 1584949824 1585047469 1585392952

நாட்டில் கொவிட் தொற்று உறுதியானவர்களின் மொத்த எண்ணிக்கை 400, 000ஐ கடந்துள்ளது.

நேற்று வரையில், தொற்று உறுதியானவர்களின் மொத்த எண்ணிக்கை 398, 801 ஆக காணப்பட்டது.

இந்த நிலையில், கடந்த நான்கு நாட்கள் மேற்கொள்ளப்பட்டிருந்த பரிசோதனைகளில், தாமதமான முடிவுகளில் மேலும் 4, 484 பேருக்கு தொற்றுறுதியானதாக தொற்று நோய் விஞ்ஞானப் பிரிவு தெரிவித்துள்ளது.

இதற்கமைய, தொற்று உறுதியானவர்களின் மொத்த எண்ணிக்கை 403, 285 ஆக அதிகரித்துள்ளது.