வவுனியா சதொசாவில் சீனிக்கு தட்டுப்பாடு

sugar 03
sugar 03

வவுனியா சதொசாவில் சீனிக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

 வவுனியா நகரில் அமைந்துள்ள சதொசா விற்பனை நிலையத்தில் சீனியினை கொள்வனவு செய்ய செல்பவர்கள் ஏமாற்றத்துடன் திரும்ப வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

சீனிக்கான விலை அதிகரிக்கப்பட்டுள்ள நிலையில் வவுனியாவில் அமைந்துள்ள மொத்த வியாபார நிலையங்களில் ஒரு கிலோ சீனி 205 முதல் 215 ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்டு வருகின்றது. அதனை கொள்வனவு செய்யும் உள்ளூர் வர்த்தகர்கள் 225 ரூபாய் முதல் 240 ரூபாய் வரையில் பொதுமக்களிற்கு விற்பனை செய்து வருகின்றனர். 
ஆயினும் சதொசா விற்பனை நிலையத்தில் ஒரு கிலோ சீனியின் விலை 120 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகின்றது. இதனால் அதிகளவான மக்கள் சீனியினை கொள்வனவு செய்வதற்காக அங்கு செல்லும் நிலையில் சீனி இல்லை என்று அங்கு தெரிவிக்கப்படுகின்றது. 

இதனால் பொதுமக்கள் ஏமாற்றத்துடன் திரும்பி செல்வதுடன், அதிகவிலைக்கு உள்ளூர் கடைகளில் சீனியினை கொள்வனவு செய்கின்றனர்.எனவே சதொசா விற்பனை நிலையமூடாக தட்டுப்பாடின்றி பொதுமக்களிற்கு சீனியினை விற்பனை செய்வதற்கான நடவடிக்கையினை அரசாங்கம் முன்னெடுப்பதுடன் மொத்த மற்றும் உள்ளூர் வியாபாரிகளும் நியாயமான விலையில் சீனியினை விற்பனை செய்வதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுகின்றனர்.