அரசாங்கம் செய்யும் சலுகைகளை மக்களிடம் கொண்டு சேர்ப்பதில்லை!

received 6029325033806237 1
received 6029325033806237 1

அரசாங்கம் எவ்வளவோ சலுகைகளை செய்யும் இந்த வேளையில் அதனை மக்களிடம் கொண்டு சேர்ப்பதற்கு இங்குள்ள ஆழும் கட்சிகள் இணங்குவதில்லை என  தமிழர் ஜக்கிய சுதந்திர முன்னணியின் வடமாகாண இணைப்பாளர் தெரிவித்துள்ளார்.

தமிழர் ஜக்கிய சுதந்திர முன்னணியின் வடமாகாண இணைப்பாளர் முல்லைத்தீவு மாவட்டத்தில் இன்று ஊடகவியலாளர் சந்திப்பை நடத்தியபோதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்…

வடமாகாணத்திற்கான பொறுப்பாளராக வந்துள்ளேன் எமது கட்சிக்கு என்னை வடக்கின் பொறுப்பாளராக நியமித்துள்ளார்கள். தமிழர் ஜக்கிய சுதந்திர முன்னணி வடமாகாணத்தில் இந்த முறை தனது செயற்திட்டத்தினை தொடங்கியுள்ளது.

எமது மக்கள் வீழ்ந்த இடத்தில் எங்கள் கட்சி நிக்கின்றது இந்த மாவட்டம் கடந்த பத்து வருடங்களாக ஆழும் கட்சிகளால் புறக்கணிக்கப்பட்டு வாக்குகளை பெற்றுவிட்டு இன்று வரைக்கும் வாழ்வாதாரம் இல்லாமல் தவிக்கும் முன்னாள் போராளிகள் போரில் பாதிக்கப்பட்ட மக்கள் எந்த வாழ்வாதாரம் இல்லாமல் வாழ்ந்து வருகின்றார்கள்.

எங்கள் கட்சி வடமாகாணத்தில் காலூன்றி தமிழ்தேசியக்கூட்டமைப்பின் ஏமாற்று அரசியலை வெளியில் கொண்டுவந்து எமது மக்களை காத்து அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள மாகாணசபை தேர்தலில் மக்கள் வாக்குகளை பெற்று மக்களைத்தான் அனுப்ப போகின்றோம் அவர்களை மகுடம் சூட்டி அழகு பார்க்கவுள்ளோம் என்று எமது தலைவர்  சொல்லியுள்ளார். அதற்கான வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

முல்லைத்தீவு, கிளிநொச்சி, மன்னார், யாழ்ப்பாணம் மாவட்டங்களில் செலயலகங்களை அமைத்து மக்களின் குறைகளை கண்டறிந்து அவற்றை மாற்றி அமைக்கவுள்ளோம். அரசாங்கம் எவ்வளவோ சலுகைகளை செய்யும் இந்த வேளையில் அதனை மக்களிடம் கொண்டு சேர்ப்பதற்கு இங்குள்ள ஆழும் கட்சிகள் இணங்குவதில்லை எவ்வளவே திட்டங்கள் கிடப்பில் கிடக்கின்றன. ஒரு அமைச்சிடம் நாங்கள் வினாவும் போது அவர்கள் சிரிக்கின்றார்கள் ஆழும் அமைப்பு அல்லது தமிழ்தேசியக்கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் பதவிகளை வைத்துக்கொண்டு எதுவும் செய்யவில்லை இந்த முறையினை மாற்றவேண்டும்.

முல்லைத்தீவு மாவட்டத்தில் இன்றும் மரத்தின் கீழ் குடும்பங்கள் நடத்தும் எத்தனையே குடும்பங்கள் இருக்கின்றார்கள் இதனை மாற்றி வடமாகாணத்தினை அதிலும் முல்லைத்தீவினை நல்ல நிலமைக்கு கொண்டு வந்து யுத்த பூமியினை ஒரு செழிப்பான பூமியாக மாற்றுவோம் என்று மக்கள் மீது ஆணையாக தெரிவித்துக்கொள்கின்றேன் என்றார்