ஊரடங்கை நீடிப்பதா? இன்று இறுதித் தீர்மானம்

thanimai
thanimai

தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டத்தை மேலும் நீடிப்பதா அல்லது நீக்குவதா என்பது தொடர்பான இறுதி தீர்மானம் இன்றைய தினம் அறிவிக்கப்படவுள்ளது.

சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்தியர் அலேச குணவர்தன இதனைத் தெரிவித்துள்ளார்.

கொவிட்19 ஒழிப்பு ஜனாதிபதி செயலணி இன்று மீண்டும் கூடி இது தொடர்பான தீர்மானத்தை அறிவிக்கவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

தினசரி பதிவாகும் நோயாளர்கள் மற்றும் மரணங்களின் தரவுகளை ஆராய்ந்து, தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டத்தை நீடிப்பதா அல்லது நீக்குவதா என்பது தொடர்பில் தீர்மானிக்கப்படும்.

சுகாதார நடைமுறைகளை பொதுமக்கள் முறையாக பின்பற்றினால், எதிர்வரும் இரண்டு வாரங்களில் கொவிட் நோயாளர்கள் மற்றும் மரணங்களின் எண்ணிக்கையில் வீழ்ச்சி ஏற்படும் என சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்தியர் அசேல குணவர்தன தெரிவித்துள்ளார்.