கடல் அரிப்பை தடுக்கும் வேலைத்திட்டம் அம்பாறையில் முன்னெடுப்பு

ca991269 3cf74ffe sea 850x460 acf cropped
ca991269 3cf74ffe sea 850x460 acf cropped

அம்பாறை- நிந்தவூர் பிரதேசத்தில், கடற்கரை சார்ந்த பகுதிகளில் ஏற்பட்டுள்ள கடல் அரிப்பை தடுக்கும் முகமாக தடுப்புச்சுவர் அமைக்கும் வேலைகள் ஆரம்பமாகி நடைபெற்று வருகின்றது.

கரையோரம் பேணல் திணைக்களத்தினால் 100 மீட்டர் நீளத்துக்கு கற்களை கொண்டு தடுப்புச்சுவர் அமைக்கும் வேலைகள் ஆரம்பமாகியுள்ளது.

இந்த திட்டம், நிந்தவூர் கடற்கரை சிறுவர் பூங்கா அமைந்துள்ள பகுதிக்கு முன்னால் இருந்து ஆரம்பமாகியுள்ளதுடன் இதற்காக 12 மில்லியன் ரூபாய் செலவிடப்பட இருக்கின்றது.

மேலும் மீனவர்கள், மீன்பிடி நடவடிக்கைக்காக பயன்படுத்தப்படுகின்ற பகுதிகளில் கற்களை கொண்டு தடுப்பு சுவர் அமைப்பது, அவர்களின் நாளாந்த தொழிலுக்கு தடையாக அமையும் என்பதனால் மண் மூடைகள் இடுவதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.