சீனி விலையை குறைக்க முடியாது – இறக்குமதியாளர் சங்கம்

IMG 20201110 WA0068 775102
IMG 20201110 WA0068 775102

சீனியின் விலையை குறைக்க முடியாதென இறக்குமதியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

சுமார் மூன்று வாரங்களுக்கு போதுமான சீனியே கையிருப்பில் உள்ளதாக இறக்குமதியாளர் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.

ஏதாவது ஒரு விதத்தில் இறக்குமதிக்கு அரசாங்கம் அனுமதியளிக்காவிடத்து நாட்டில் சீனிக்கான தட்டுப்பாடு ஏற்படக்கூடும் என சீனி இறக்குமதியாளர்கள் சங்கத்தின் உபதலைவர் நிஹால் செனவிரத்ன தெரிவித்துள்ளார்.

நாட்டில் சீனியின் விலை தொடர்பில் பாரிய கருத்தாடல் எழுந்துள்ளது.

ஒரு வாரத்திற்கு ஒரு கிலோ சீனியின் விலை 100 ரூபாவினால் அதிகரித்துள்ளது.

இந்தநிலையில் சீனியை பயன்படுத்தி தயாரிக்கப்படும் உற்பத்திகளுக்கான விலையை அதிகரிப்பது தொடர்பிலும் கருத்துகள் முன்வைக்கப்படுகின்றன.

இந்தவிடயம் குறித்து கருத்துரைத்த சிற்றுண்டிசாலைகள் உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் அசேல சம்பத் ஒரு கோப்பை தேநீரின் விலை 25 ரூபாவாக அதிகரிக்க நேரிட்டுள்ளதாக குறிப்பிட்டார்.

இது குறித்து இன்று ஊடகங்களுக்கு கருத்துரைத்த போதே அவர் இதனை சுட்டிக்காட்டியுள்ளார்.

வருடாந்தம் தேவையான சீனியில் 20 சதவீத சிவப்பு சீனி நாட்டில் உற்பத்தி செய்யப்படுகின்றது.

ஏனையவை பிரேஸில் அல்லது இந்தியா போன்ற நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.