இந்தோனேஷியாவில் 7,200 வருடங்களுக்கு முற்பட்ட மனித எச்சங்கள் கண்டுபிடிப்பு

Amp Image 61272845a6a30
Amp Image 61272845a6a30

இந்தோனேஷியாவில் 7 ஆயிரத்து 200 வருடங்களுக்கு முற்பட்ட மனித எச்சங்களை தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் மீட்டெடுத்துள்ளனர்.

தனித்துவமான பரம்பரை மனித எச்சமாக கருதப்படும் இது போன்ற பழைமை வாய்ந்த எலும்புக்கூடு உலகில் எங்கும் இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. மரபணு பரிசோதனை மூலம் இது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இது இந்தோனேஷிய, தென் சுலவெசியில் உள்ள சுண்ணாம்பு குகை ஒன்றில் இருந்த 17 அல்லது 18 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவரின் உடல் என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இந்த விடயம் குறித்த விபரங்கள் உலகப்புகழ்பெற்ற ‘நேச்சர்’ என்ற மருத்துவ சஞ்சிகையிலும் பிரசுரிக்கப்பட்டுள்ளது.