ஆங்கில பாடப்புத்தகத்தில் வடக்கு, கிழக்கு இணைப்பா??

grade 5
grade 5

ஆங்கில மொழி பாடப்புத்தகத்தில் உள்ள இலங்கைப்படத்தில் வடக்கு, கிழக்கு மாகாணங்கள் ஒரே வண்ணத்தில் வரையப்பட்டிருப்பதாக தேசிய பாரம்பரிய பாதுகாப்பு அமைப்பின் ஜனக போடிநந்த குணதிலக தெரிவித்தார்.

முன்னைய அரசாங்கத்தினால் அச்சிடப்பட்டு வெளியிடப்பட்ட 5 ஆம் வகுப்பின் ஆங்கில பாடப்புத்தகத்தில் இவ்வாறு காணப்படுவதாக தெரிவித்தார்.

இவ்வாறு இரு மாகாணங்களும் ஒரே வண்ணத்தில் அமைவது நாட்டின் ஒற்றுமையை கெடுக்கும் செயல் எனவும், தேசிய விழாக்கள் அறிமுகப்படுத்துவதில் சிங்கள மற்றும் இந்து புத்தாண்டு சேர்க்கப்படவில்லை எனவும், வட மத்திய மாகாணத்தின் அறிமுகத்தில் இப்பகுதியில் உள்ள ஒரு வரலாற்று ஆலயத்தின் புகைப்படம் சேர்க்கப்பட வேண்டும் எனவும் தனது ஆதங்கத்தினை வெளிப்படுத்தியுள்ளார்.

எனவே இது தொடர்பில் கவனம் செலுத்துமாறு தற்போதைய அரசாங்கத்திடம் தனது கோரிக்கையினை முன்வைத்துள்ளார்.