மக்களை சோகத்தில் ஆழ்த்திய சுனாமி பேரலையின் 15 வருட நிறைவு!!

tsunami26
tsunami26

சுனாமி பேரலை ஏற்படுத்திய தாக்கம் இன்றுடன் 15 வருடங்களை பூர்த்தி செய்கின்றது,

சுனாமி அனர்த்தம் காரணமாக உயிரிழந்தவர்களை நினைவுகூரும் வகையில் இன்று காலை 9.25 மணி முதல் 9.27 மணி வரை இரண்டு நிமிட மௌன அஞ்சலி செலுத்துமாறு அனர்த்த முகாமைத்துவ அமைச்சு கேட்டுக்கொண்டுள்ளது.

இந்தோனேஷியாவின் சுமத்ரா தீவில் 2004 ஆம் ஆண்டில் சிறியதாய் தோன்றிய அலை ஒன்று பூதாகரமாய் பெருக்கெடுத்து, தெற்காசிய நாடுகளையே புரட்டிப் போட்டது.

உறவினர்கள், நண்பர்கள், உடமைகளை இழந்துவிட்டு பல்லாயிரம் மக்கள் தவியாய் தவித்தனர். என்னவென்றே தெரியாத அந்த பேரலை இன்று எல்லோர் மனதிலும் பாதிப்பாய் பதிந்து போய் கிடக்கின்றது.

ஜப்பானிய மொழியில் ‘துறைமுக பேரலை’ என்பதே சுனாமி என அழைக்கப்படுகிறது. இது தமிழில் ஆழிப்பேரலை என அழைக்கப்படுகிறது.

உயிர் சேதத்துடன், கோடிக் கணக்கில் பொருள் சேதத்தையும் ஏற்படுத்தியத ‘சுனாமி’ என்ற வார்த்தையை மக்கள் கேள்விப்பட்டதில்லை. ‘கடல் அலை’ ஊருக்குள் வந்த போது தான் ‘சுனாமி’ என தெரிந்தது. இதன் கோபம் வெறும் பத்து நிமிடம் தான். அது ஏற்படுத்திய சோகம் என்றும் அழிவதில்லை.