முஸ்லிம் விவாக, விவாகரத்துச் சட்டம் இரத்து

athuraliya rathna thero
athuraliya rathna thero

முஸ்லிம் விவாக, விவாகரத்துச் சட்டத்தை இரத்துச் செய்வதற்கான பிரேரணை ஒன்றை நாடாளுமன்ற உறுப்பினர் அத்துரலிய ரத்ன தேரரால் சமர்ப்பிக்கப்படவுள்ளது .

இது தொடர்பில் அரச வர்த்தமானியில் பிரசுரிக்கப்பட்டுள்ளது.

விவாக சட்டத்தில் திருத்தங்களைக் கொண்டுவர ஒரு சட்டமூலத்தை அவர் சமர்ப்பிக்கவுள்ளார்.

குறித்த பொதுவான சட்டத்தை சகல பிரஜைகளுக்கும் பிரயோகிக்கக் கூடிய ஒன்றாக மாற்றுவதே இந்தச் சட்டமூலத்தின் நோக்கம் என அவர் தெரிவித்துள்ளார்.

முஸ்லிம் விவாக மற்றும் விவாகரத்துச் சட்டம் உட்பட ஏனைய சகல விவாக சட்டங்களையும் மேலோங்கியதாக விவாக ஒழுங்கு விதிகளை மாற்றியமைப்பதே சட்ட மூலத்தின் நோக்கமாகும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.