வவுனியாவில் போக்குவரத்து காவல்துறையினரால் விசேட சோதனை!

21 6131d6b5d5ec5
21 6131d6b5d5ec5

கொவிட் தொற்று காரணமாக நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு சட்டத்தை மீறி அத்தியாவசிய தேவையின்றி வவுனியா நகருக்குள் நுழையும் வாகனங்களுக்கு எதிராகப் போக்குவரத்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

வவுனியா மாவட்டத்தில் கொவிட் தொற்று அதிகரித்து வரும் நிலையில் தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டத்தை மீறிச் செயற்படும் வாகனங்களைக் கண்டறியும் முகமாகப் போக்குவரத்து காவல்துறையினர் குருமன்காடு மற்றும் மன்னார் வீதியில் இன்று காலை விசேட சோதனை நடவடிக்கையை மேற்கொண்டுள்ளனர்.

இதன்போது, மன்னார் வீதி வழியாக வவுனியா நகருக்குள் நுழைந்த அனைத்து வாகனங்களும் வழி மறிக்கப்பட்டு, அவர்களது போக்குவரத்து பாஸ் சோதனை செய்யப்பட்டுள்ளது. அத்தியாவசிய தேவையின்றி நகருக்குள் பிரவேசித்த வாகனங்கள் பலவும் கடுமையான எச்சரிக்கையுடன் திரும்ப அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அத்துடன், தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறிச் செயற்பட்ட 10 வாகன சாரதிகளுக்கு எதிராகப் போக்குவரத்து காவல்துறையினரால் வழக்குப் பதிவும் செய்யப்பட்டுள்ளது.