அன்டியன் பரிசோதனை மேற்கொள்ள மறுத்த குடும்பங்களுக்கு கொரோனா!

202108250556043045 A US intelligence report on how the Corona appeared will be SECVPF
202108250556043045 A US intelligence report on how the Corona appeared will be SECVPF

வவுனியா சாந்தசோலையில் இன்று ( 03 ) அன்டியன் பரிசோதனை மேற்கொள்ள மறுப்பு தெரிவித்த இரு குடும்பங்கள் உட்பட 15 குடும்பங்களை சேர்ந்த 60 உறுப்பினர்கள் தனிமைப்படுக்கப்பட்டுள்ளனர். வவுனியா சாந்தசோலை கிராமத்தில் வீடுகளில் வசிப்பவர்களுக்கு பரவலாக காய்ச்சல் பீடித்துள்ளதாக கண்டறியப்பட்டுள்ளதை அடுத்து நொச்சிமோட்டை கிராம அலுவலகர் ஊடாக சாந்தசோலை மாதர் அபிவிருத்திச்சங்கம், சனசமூக நிலையம் என்பன இணைந்து விடுக்கப்பட்ட கோரிக்கைக்கு அமைவாக சுகாதாரத்துறையினர் மற்றும் காவல்துறையினர் இணைந்து மேற்கொண்ட இந்நடவடிக்கையில் இன்று சாந்தசோலை கிராம பொதுநோக்கு மண்டபத்தில் முன்னெடுக்கப்பட்ட  அன்டியன் பரிசோதனையின்போது 15 குடும்பங்களை சேர்ந்த 60 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதுடன் குறித்த பரிசோதனைக்கு ஒத்துழைக்க மறுத்த இரு குடும்பங்கள் காவல்துறையினரின் அறிவுறுத்தலையடுத்து அவர்களுக்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனைகளில் இரு குடும்பங்களுக்கும் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

 இதேவேளை 65 பேருக்கு பி.சி.ஆர். பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது . இதன் முடிவுகள் கிடைக்கும்போது தோற்று மேலும் அதிகரிக்க வாய்ப்புக்கள் காணப்படுகின்றன. சாந்தசோலையில் ஏற்கனவே பிறந்த தின நிகழ்வில் கலந்து கொண்ட நான்கு பேர் உட்பட 25 பேருக்கு மேற்பட்டவர்கள் தொற்று அடையாளப்படுத்தப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர் . 

இதேவேளை இப்பரிசோதனையில் கலந்து கொள்ளாதவர்கள் பிராந்திய சுகாதார சேவைகள் அலுவலகத்தில் பரிசோதனைகள் மேற்கொள்ளுமாறு மாதர் அபிவிருத்திச்சங்கத்தினால்  பொதுமக்களுக்கு அறிவித்தல் வழங்கப்பட்டுள்ளன.