ராஜித இன்று மீண்டும் மனு ஒன்றை தாக்கல் செய்தார்!

4 ges
4 ges

தன்னை கைதுசெய்யுமாறு நீதிவான் பிறப்பித்த உத்தரவை திரும்பப் பெறுமாறு கோரி முன்னாள் அமைச்சரும், நாடாளுமன்ற உறுப்பினருமான ராஜித சேனாரத்ன நீதிதமன்றில் மனுத் தாக்கல் செய்துள்ளார்.

வெள்ளை வேன் விவகார ஊடகவியலாளர் சந்திப்பை மையப்படுத்தி குற்றப் புலனயவுத் திணைக்களம் தன்னைக் கைதுசெய்ய முன்னர், முன் பிணையில் தன்னை விடுவிக்குமாறு கோரி முன்னாள் அமைச்சரும் ஐக்கிய தேசிய கட்சி பாராளுமன்ற உறுப்பினருமான ராஜித்த சேனாரத்ன ஏற்கனவே முன் பிணை மனு தாக்கல் செய்திருந்தார்.

இந் நிலையில் அவரது முன் பிணை மனு நிராகரிக்கப்பட்டு, சட்ட மா அதிபரின் விஷேட ஆலோசனைக்கு அமைய 1997 ஆம் ஆண்டின் 30 ஆம் இலக்க பிணை சட்டத்தில் 25 ஆம் அத்தியாயத்தின் பிரகாரம் ராஜித்த சேனாரத்னவை கைதுசெய்து நீதிமன்றில் ஆஜர் செய்யுமாறு கொழும்பு மேலதிக நீதிவான் ஆர்.பி. நெலும்தெனிய நேற்று முன்தினம் உத்தரவிட்டார்.

இதன் பின்னர் ராஜிதவை கைதுசெய்வதற்காக குற்றப்ப புலனாய்வுப் பிரிவினர் அவரது வீடு, அவர் மறைத்திருக்கலாம் என சந்தேகிக்கப்படும் மேலும் சில இடங்களையும் சோதனைக்குட்படுத்தியதாகவும் இதன்போது அவர் அவ் விடங்களில் இருக்கவில்லை.

இந் நிலையிலேயே இன்றைய தினம் -26- ராஜித சேனாரத்ன தன்னை கைதுசெய்யுமாறு நீதிவான் பிறப்பித்த உத்தரவை திரும்பப் பெறுமாறு கோரி சட்டத்தரணியூடாக நீதிமன்றில் மனுத் தாக்கல் செய்துள்ளார்.