எதிர்க்கட்சி வரிசையில் ஆசனத்தை தாருங்கள் – குமார வெல்கம

1 we 1
1 we 1

எதிர்வரும் 3 ஆம் திகதி நாடாளுமன்றம் கூடும்போது தனக்கு எதிர்க்கட்சி வரிசையில் ஆசனத்தை ஒதுக்கித்தருமாறு களுத்துறை மாவட்ட ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் குமார வெல்கம, சபாநாயகரிடம் கேட்டுக்கொண்டுள்ளார்.

ஆளுங்கட்சி தரப்பில் தங்களுக்கு ஆசனங்களை ஒதுக்கித்தருமாறு ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களான ரத்ன தேரர் மற்றும் வசந்த சேனாநாயக்க ஆகியோரும் சபாநாயகருக்கு தெரிவித்துள்ளதாக நாடாளுமன்ற படைக்கல சேவிதர் நரேந்திரா பெர்ணாந்து தெரிவித்தார்.

இவர்களின் கோரிக்கைகளை கருத்திற்கொண்டு சிரேஷ்டத்துவத்தின் அடிப்படையில் அவர்களுக்கு ஆசனங்களை ஒதுக்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.