தெரணியகல பிரதேச சபை தவிசாளரை கூரிய ஆயுதத்தால் தாக்கிய பெண்!

download 3 3
download 3 3

தெரணியகல பிரதேச சபை தவிசாளரை பெண்ணொருவர் கூரிய ஆயுதத்தினால் தாக்கியுள்ளார்.

சம்பவத்தில் காயமடைந்த தவிசாளர் தற்போது, தெரணியகல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.

தெரணியகல – தெல்ஒலுவ பிரதேசத்தில் நேற்று இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

தாக்குதலை மேற்கொண்ட சந்தேகநபரான பெண்ணை கைதுசெய்துள்ள காவல்துறையினர், அவரை நாளை நீதிமன்றில் முன்னிலைப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளனர்.