கிளிநொச்சி பேருந்து நிலைய வளாகத்தில் அத்துமீறி கடை அமைக்க முயற்சி!

IMG 20210906 113018
IMG 20210906 113018

கிளிநொச்சி பேருந்து நிலைய வளாகத்தில் அத்துமீறி கடை அமைக்க முயற்சித்த நிலையில் மாகாண வீதி பயணிகள் போக்குவரத்து அதிகாரசபை தடுத்து நிறுத்தியது.

கிளிநொச்சி பேருந்து நிலையத்தின் அபிவிருத்தி பணிகள் இடம்பெற்று வரும் நிலையில், அங்கு அமைக்கப்பட்டிருந்த தற்காலிக கடைகளை அகற்ற நடவடிக்கை எடுக்கப்படது.

IMG 20210906 111406

இந்த நிலையில் இன்று காலை தற்காலிக கடைகளை பேருந்து நிலைய வளாகத்தில் அமைக்க வர்த்தகர்களல் நடவடிக்கை எடுத்தப்பட்டது.

இந்த நிலையில் அங்கு வருகை தந்திருந்த வட மாகாண வீதி பயணிகள் போக்குவரத்து அதிகாரசபையின் மாவட்ட அலுவலர் ஈ.சாந்தமெடில்டா வர்த்தகர்களுடன் கலந்துரையாடியிருந்தார்.

குறித்த பகுதியில் எவ்வித அபிருத்தியும் செய்ய வேண்டாம் எனவும், பேருந்து நிலையம் திறக்கப்பட்டதன் பின்னரே வர்த்தக நிலையம் அமைப்பது தொடர்பில் கவனம் செலுத்த முடியும் என மாவட்ட அரசாங்க அதிபர் உள்ளிட்டோர் அண்மையில் இடம்பெற்ற கலந்துரையாடலில் குறிப்பிட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

IMG 20210906 113006

இந்த நிலையில், அபிவிருத்திக்கு எவ்வித பாதிப்பும் இல்லாது தாம் செயற்படுவதாக வர்த்தகர்கள் தெரிவித்தனர்.

இதேவேளை, குறித்த தற்காலிக கடைகளை தாம் பொருத்தமான பகுதிகளில் அமைத்து வாழ்வாதாரத்தை மேம்படுத்த நடவடிக்கை எடுக்குமாறு மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.

தற்பொழுது மேற்கொள்ளப்படும் பேருந்து நிலைய அபிவிருத்தி காரணமாக தற்காலிக கடைகளை நடார்த்துவதில் வர்த்தகர்களிற்கு முடியாதுள்ளதாகவும், அதனால் தமது வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாகவும் அவர்கள் தெரிவிக்கின்றனர்.