நுகர்வோர் விவகார அதிகார சபை சோதனையில் 7,125 மெட்ரிக் டன் சீனி கைப்பற்றல்!

download 3 5 150x150 1
download 3 5 150x150 1

நுகர்வோர் விவகார அதிகார சபையினால் நாட்டின் பல பாகங்களில் முன்னெடுக்கப்பட்ட திடீர் சோதனை நடவடிக்கையின்போது மனித பாவனைக்கு உதவாத பெருந்தொகை சீனி கைப்பற்றப்பட்டுள்ளன.

அதனடிப்படையில் ப்ளுமெண்டல் பகுதியிலுள்ள களஞ்சியசாலையொன்றில் 1,500 மெட்ரிக்டன் சீனியும், ஒருகொடவத்தையில் உள்ள களஞ்சியசாலையொன்றிலிருந்து 5,500 மெட்ரிக் டன் சீனியும் கைப்பற்றப்பட்டுள்ளது.

இதற்கிடையில், மனித நுகர்வுக்கு தகுதியற்ற ஒருதொகை சீனி பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக கிடைத்த தகவலின் பேரில் வத்தளை பகுதியில் இன்று(06) காவல்துறை சிறப்பு அதிரடிப்படை மற்றும் நுகர்வோர் விவகார அதிகார சபை மீண்டும் சோதனை நடத்தியது.

இந்த சோதனை நடவடிக்கையின்போது மனித பாவனைக்குவதவாத 125 மெட்ரிக் டன் சீனி கைப்பற்றப்பட்டதோடு குறித்த களஞ்சியசாலைக்கு முத்திரையிடப்பட்டுள்ளது.

இதேவேளை, திருகோணமலை மாவட்டத்தில் உள்ள தம்பலகாமம் மற்றும் முள்ளிப்பொத்தானை பகுதிகளில் உள்ள மூன்று நெல் களஞ்சியசாலைகள் சோதனை செய்யப்பட்டு 150,000 கிலோ நெல் மூடைகள் கைப்பற்றப்பட்டு குறித்த களஞ்சியசாலைகளுக்கும் முத்திரையிடப்பட்டுள்ளது.