தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டத்தை மீறிய குற்றச்சாட்டில் 665 பேர் கைது

thanimai
thanimai

இன்று(07) காலை 6 மணியுடன் நிறைவடைந்த 24மணி நேரத்தில் தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டத்தை மீறிய குற்றச்சாட்டில் 665 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

காவல்துறை பேச்சாளர், சிரேஷ்ட காவல்துறை அத்தியட்சகர் நிஹால் தல்துவ இதனைத் தெரிவித்துள்ளார்.

இந்த காலப்பகுதியில், 69 வாகனங்களும் காவல்துறையினால் கையகப்படுத்தப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதற்கமைய, நாட்டில் இதுவரையில் தனிமைப்படுத்தல் விதிமுறைகளை மீறிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 66,668 ஆக அதிகரித்துள்ளது.