மட்டக்களப்பு சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் அதிகூடிய கொரோனா மரணங்கள் — வைத்தியர் நா. மயூரன்

IMG 5815
IMG 5815

மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த 24 மணித்தியாலயத்தில் 2 பேர் உயிரிழந்ததுடன்  206 பேருக்கு கொரோனா தொற்று உறுதி கண்டறியப்பட்டதையடுத்து மாவட்டத்தில் உயிரிழந்தோர் 248 ஆக அதிகரித்துள்ளதாகவும் மட்டு சுகாதார பிரிவிலே அதிகமான 55 மரணம் ஏற்பட்டுள்ளதாக  மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் நா. மயூரன் தெரிவித்தார்.

மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையில் இன்று செவ்வாய்க்கிழமை (07) இடம்பெற்ற ஊடகசந்திப்பில் அவர் இவ்வாறு தெரிவித்தார். 

மட்டக்களப்பு சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் ஒருவரும், வவுணதீவு சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் ஒருவர் உட்பட இருவர் கடந்த 24 மணித்தியாலயத்தில் உயிரிழந்ததையடுத்து மாவட்டத்தில் 248 ஆக உயிரிழப்பு அதிகரித்துள்ளது.

அதே வேளை களுவாஞ்சிக்குடி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 50 பேருக்கும், மட்டக்களப்பு சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 73 பேருக்கும், செங்கலடி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 30 பேர் உட்பட 206 பேருக்கு தொற்று உறுதி கண்டறியப்பட்டுள்ளதுடன் மட்டக்களப்பு சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் அதி கூடியதாக 55 பேரும், காத்தான்குடி  சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 35 பேரும் இதுவரை மரணமடைந்துள்ளனர்.  

கடந்த மாதத்தில் 7959 கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதுடன் கடந்த வாரத்தில் 1414 பேருக்கும் தொற்று கண்டறியப்பட்டதுடன் நாளாந்தம் 200 மேற்பட்ட தொற்றாளர்களும் 5 மேற்பட்ட உயிரிழப்பும் இடம்பெறுகின்றதுடன் தொடர்ந்து 2013 பேர் சிகிச்சை பெற்று வருகின்றதுடன் இவர்களில் 1600 பேர் வீடுகளில் வைத்து பராமரிக்கப்படுகின்றனர்.

மாவட்டத்தில் முதல் தடுப்பூசி 30 வயதுக்கு மேற்பட்ட 95 வீதமான 27.0000 ஆயிரம் பேருக்கு ஏற்றப்பட்டதுடன் இரண்டாவது தடுப்பூசி 74 வீதமான 2.19000 ஆயிரம் பேருக்கு ஏற்றப்பட்டுள்ளது 

எனவே மக்கள் முதலில் தடுப்பூசியை ஏற்றிக் கொள்ளுங்கள் சுகாதார நடைமுறைகளை பின்பற்றி சமூக பெறுப்புடன் நடந்து கொண்டால் மாத்திரதே இந்த தொற்றை கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரமுடியும் என்றார்.