மொறக்கொட்டாஞ்சேனைக்கு கசிப்பு எடுத்து வந்த ஒருவர் கைது :ஒருவர் தப்பி ஓட்டம்

kaithu
kaithu

மட்டக்களப்பு ஏறாவூர் காவற்துறை பிரிவிலுள்ள திகிலிவெட்டை பிரதேசதத்தில் இருந்து வாவி ஊடாக தோணியில் அமாறக்கொட்டாஞ்சேனை பிரதேசத்திற்கு வியாபாரத்துக்காக கொண்டுவரப்பட்ட கசிப்புடன் ஒருவரை இன்று செவ்வாய்க்கிழமை (07) அதிகாலை கைது செய்துள்ளதுடன் ஒருவர் தப்பி ஓடியுள்ளதாக  மாவட்ட குற்ற விசாரணைப்பிரிவு பொறுப்பதிகாரி பி.கே பண்டார தெரிவித்தார். 

மாவட்ட குற்ற விசாரணைப் பிரிவுக்கு கிடைத்த தகவலையடுத்து மாவட்ட சிரேஸ்ட காவற்துறை அத்தியட்சகர் சுகத் மாசிங்காவின் ஆலோசனைக்கமைய மாவட்ட குற்ற விசாரணைப்பிரிவு பொறுப்பதிகாரி பி.கே பண்டார தலைமையிலான காவற்துறையினர் சம்பவதினமான இன்று அதிகாலை 3.30 மணிக்கு மொறக்கொட்டாஞ்சேனை வாவி பகுதியில் கண்காணிப்பில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர்.

இதன் போது வாவியில் தோணி இரண்டில் இருவர் கசிப்புக்களை கலன்களில் எடுத்து கொண்டு வந்து கரை ஓதுங்கிய போது  அவர்களை காவற்துறையினர் மடக்கிப்பிடித்தனர் இதன் போது ஒருவர் தப்பி ஓடியுள்ளதாகவும் ஒருவரை 80 லீற்றர் கசிப்புடன் கைது செய்துள்ளதுடன் இரண்டு தோணிகளை மீட்டுள்ளனர்.

இதில் கைது செய்தவர் மற்றும் கசிப்பு தோணிகளை ஏறாவூர் காவற்துறையினரிடம் ஓப்படைத்துள்ளதாகவும் இவரை நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதுடன் தப்பி ஒடியவரை கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.