சீனாவின் 2021 எதிர்கால அறிவியல் விருதை வென்றவர்களில் ஒருவராக இலங்கையரும்

E E8NtaVQAAWsLF
E E8NtaVQAAWsLF

2021 ஆம் ஆண்டு எதிர்கால அறிவியல் விருதை வென்றவர்களில் பேராசிரியர் மலிக் பீரிஸும் ஒருவர் என்று கொழும்பிலுள்ள சீன தூதரகம் தெரிவித்துள்ளது.

ஹாங்கொங்கின் சிறந்த தொற்று நோய் நிபுணர்களுள் ஒருவரான பேராசிரியர் யுவன் க்வோக்-யுங் ஆகியோருடன் இணைந்து மலிக் பீரிஸ் இந்த விருதினை ஒரு மில்லியன் அமெரிக்க டொலருடன் பெற்றுள்ளார்.

சார்ஸ் மற்றும் கொவிட் -19 போன்ற வளர்ந்து வரும் நோய்களைப் புரிந்துகொள்வதில் அவர்களின் பங்களிப்பு மற்றும் ஆய்வுக்காக இந்த விருது வழங்கப்படவுள்ளது.

இந்த விருது வழங்கும் விழா நவம்பர் 21 ஆம் திகதி பீஜிங்கில் நடைபெறும்.

சீனாவில் அறிவியல் முன்னேற்றங்கள் மற்றும் கண்டுபிடிப்புகளை ஊக்குவிப்பதற்காக எதிர்கால அறிவியல் பரிசு 2016 இல் தனியார் நிதியால் நிறுவப்பட்டது.

பேராசிரியர் மலிக் பீரிஸ் ஒரு இலங்கை நோயியல் நிபுணர் மற்றும் வைராலஜிஸ்ட் ஆவார். அவரது ஆராய்ச்சி ஆர்வங்களில் சுற்றுச்சூழல், பரிணாமம், நோய்க்கிருமி உருவாக்கம், விலங்கு-மனித இன்ஃப்ளூயன்ஸா மற்றும் பிற மனித சுவாச வைரஸ் தொற்றுகள், 320 க்கும் மேற்பட்ட ஆராய்ச்சி வெளியீடுகள் உள்ளன.