இன்று எடுத்துவரப்பட்ட 120,000 ஸ்புட்னிக் வி தடுப்பூசிகளை கண்டி மாவட்ட மக்களுக்கு செலுத்த நடவடிக்கை

sputnik1
sputnik1

இன்று அதிகாலை நாட்டுக்கு கொண்டு வரப்பட்ட 120,000 ஸ்புட்னிக் அவி தடுப்பூசி தொகையை கண்டி மாவட்ட மக்களுக்கு இரண்டாம் தடுப்பூசியாக வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

ஒளடத உற்பத்திகள், வழங்குகைகள் மற்றும் ஒழுங்குறுத்துகை இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன இதனை தெரிவித்துள்ளார்.

குறித்த தடுப்பூசிகளை செலுத்தும் பணிகள் நாளை(20) மறுதினம் முதல் ஆரம்பிக்கப்படவுள்ளன.

இதற்கமைய முதலாவது தடுப்பூசியை பெற்றுக் கொண்ட அனைவருக்கும் முழுமையான தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கைகள் நிறைவடைவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

கண்டி மாவட்டத்தில் 150,000 பேருக்கு ஸ்புட்னிக் வி தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

அவர்களில் 60 வயதுக்கு மேற்பட்ட 30,000 பேருக்கு இரண்டாவது தடுப்பூசி வழங்கப்பட்டுள்ளது.