மட்டக்களப்பு களுவங்கேணியில் கசிப்பு உற்பத்தி நிலையம் முற்றுகை: 3 பேர் கைது கசிப்பு ,கோடா மீட்பு!

WhatsApp Image 2021 09 19 at 08.31.54
WhatsApp Image 2021 09 19 at 08.31.54

மட்டக்களப்பு ஏறாவூர் காவற்துறை பிரிவிலுள்ள களுவங்கேணி காட்டுப்பகுதியில் கசிப்பு உற்பத்தி நிலையம் ஒன்றை இன்று ஞாயிற்றுக்கிழமை (19) அதிகாலை காவற்துறையினர் முற்றுகையிட்டனார் இதன்போது கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்ட 3 பேரை கைது செய்ததுடன் 50 ஆயிரம் மில்லி லீற்றர் கசிப்பும் ,3 இலச்சத்து 20 ஆயிரம் மில்லி லீற்றர் கோடாவும் மீட்டுள்ளதாக மாவட்ட விசேட குற்ற விசாரணைப்பிரிவு பொறுப்பதிகாரி பி.எஸ்.பி. பண்டார தெரிவித்தார்.

காவற்துறை மாவட்ட விசேட குற்ற விசாரணைப்பிரிவு கிடைத்த தகவல் ஒன்றினையடுத்து மாவட்ட சிரேஷ்ட காவற்துறை அத்தியட்சகர் சுகத் மாசிங்காவின் ஆலோசனைக்கமைய மாவட்ட விசேட குற்ற விசாரணைப்பிரிவு பொறுப்பதிகாரி பி.எஸ்.பி. பண்டார தலைமையிலான காவற்துறையினர் சம்பவதினமான இன்று அதிகாலை 3 மணியளவில் குறித்த கசிப்பு உற்பத்தி நிலையத்தை முற்றுகையிட்டனர்.

இதன்போது 3 பேரை கைது செய்ததுடன் 50 ஆயிரம் மில்லி லீற்றர் கசிப்பும் ,3 இலச்சத்து 20 ஆயிரம் மில்லி லீற்றர் கோடா. மற்றும் கசிப்பு உற்பத்தி உபகரணங்களை மீட்டுள்ளனர்.

இதில் கைது செய்யப்பட்டவர்களை ஏறாவூர் காவற்துறையினரிடம் ஒப்படைத்துள்ளதாகவும் இவர்களை நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.