வவுனியா வைத்தியசாலைக்கு மருத்துவ உபகரணங்கள் கையளிப்பு

IMG 20210923 103404
IMG 20210923 103404

வவுனியா மாவட்ட கமநல அபிவிருத்தி திணைக்கள உத்தியோகத்தர்கள், விவசாயிகள், வவுனியா மாவட்ட கமநல சேவை நிலையங்களின் நிதிப்பங்களிப்பில் வவுனியா பொது வைத்தியசாலைக்கு மருத்துவ உபகரணங்கள் இன்று (23) வழங்கி வைக்கப்பட்டது.

அந்தவகையில் 10 ஒட்சிசன் கொள்கலன்கள் மற்றும் மூன்று கட்டில்கள் என 10 இலட்சம் ரூபாய் பெறுமதியான பொருட்கள் இதன்போது வழங்கி வைக்கப்பட்டது.

குறித்த உபகரணங்களை கமநல அபிவிருத்தி திணைக்களத்தின் உதவி ஆணையாளர் விஸ்ணுதாசன், வவுனியா வைத்தியசாலை பணிப்பாளர் க.ராகுலனிடம் உத்தியோக பூர்வமாக கையளித்தார்