பசுமாட்டினை வெட்டி குளத்தில் வீசிய விசமிகள்!

IMG c2deaae18f96b8f9fa39f44d5d6c425d V
IMG c2deaae18f96b8f9fa39f44d5d6c425d V

வவுனியா தவசிகுளம் பகுதியில் கன்று ஈணும் நிலையில் இருந்த பசுமாடு ஒன்றினை கத்தியால் வெட்டிய விசமிகள் அதனை அருகில் உள்ள குளத்தில் எறிந்துள்ளனர்.
குறித்த சம்பவம் தொடர்பாக தெரியவருகையில்,
வவுனியா தவசிகுளம் பகுதியை சேர்ந்த பெண் ஒருவரின் நல்லின வளர்ப்பு மாடு கடந்த இருதினங்களாக காணாமல் போயுள்ளது. இதனையடுத்து அவர் தேடுதல் மேற்கொண்டபோது அவரது வீட்டிற்கு அருகில் அமைந்துள்ள குளத்தில் உயிரிழந்த நிலையில் காணப்பட்டது.

குறித்த பசுமாட்டின் தலை மற்றும் உடல் பகுதிகள் கூரிய ஆயுதத்தால் அறுக்கப்பட்டிருந்தது. சம்பவம் தொடர்பாக வவுனியா காவல்துறையினருக்கு தெரியப்படுத்தப்பட்ட நிலையில் காவல்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.