ஐரோப்பிய ஒன்றியக் குழு முஸ்லிம் காங்கிரசுடன் முக்கிய பேச்சு!

2J0A2372
2J0A2372

இலங்கை வந்துள்ள ஐரோப்பிய ஒன்றிய உயர்மட்டத் தூதுக்குழுவினர் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ரவூப் ஹக்கீமை கட்சியின் ‘தாருஸ்ஸலாம்’ தலைமையகத்தில் இன்று சந்தித்துக் கலந்துரையாடினர்.

இதில் கட்சியின் செயலாளர் ஜனாதிபதி சட்டத்தரணி நிசாம் காரியப்பரும் பங்குபற்றினார்.

முஸ்லிம் சமூகத்தினர் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பில் இதன்போது பேசப்பட்டது.