இரு சிறுநீரகங்களும் செயலிழந்ததால் ஹாட்லி மாணவன் பரிதாப மரணம்!

Death body 720x450 1 1
Death body 720x450 1 1

சிறுநீரகங்கள் இரண்டும் செயலிழந்த நிலையில் பாடசாலை மாணவர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் வடமராட்சிப் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இவ்வாறு உயிரிழந்தவர் பருத்தித்துறை ஹாட்லிக் கல்லூரியில் 11ஆம் தரத்தில் கல்வி கற்கும் மண்டான், கரணவாய் தெற்கைச் சேர்ந்த கணேசன் கிருசிகன் (வயது – 16) என்பவராவார்.

உடல் நலக் குறைவு காரணமாக நேற்று முன் தினம் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட நிலையில் அவர் உயிரிழந்தார்.

 இது தொடர்பில் நேற்று கரவெட்டி மரண விசாரணை அதிகாரி வே.பாஸ்கரன் விசாரணைகளை மேற்கொண்டு பிரேத பரிசோதனைக்கு உத்தரவிட்டார்.

பிரேத பரிசோதனையில் இரண்டு சிறுநீரகங்களும் செயலிழந்த நிலையில் மாணவன் உயிரிழந்தார் என்று பிரேத பரிசோதனை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.