ரான்ஸ்பரன்சி இன்டர்நெஷனல் நிறுவனம் சஜீத் உட்பட 8 அமைச்சர்கள் மீது முறைப்பாடு

Transparency international
Transparency international

சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்கள் தொடர்பான தகவல்களை முன்வைக்காத அமைச்சரவை அந்தஸ்துள்ள 8 அமைச்சர்கள் தொடர்பில் ட்ரான்ஸ்பரன்சி இன்டர்நெஷனல் நிறுவனம் நேற்று லஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்துள்ளது. சொத்து வெளியீட்டு சட்டத்திற்கமைய சகல அமைச்சரவை அமைச்சர்களும் அவர்களது சொத்து மற்றும் பொறுப்பு விபரங்களை ஜனாதிபதி செயலாளர் காரியாலயத்திடம் கையளிக்க வேண்டும் என அந்த நிறுவனம் சுட்டிக்காட்டியுள்ளது.

அமைச்சரவை அமைச்சர்கள் தங்கள் அறிவிப்புகளை சொத்துக்கள் மற்றும் பொறுப்புகள் சட்டத்தின் பிரிவு 4 (அ) (II) இன் கீழ் ஜனாதிபதி செயலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும். அவ்வாறு புகார் அளிக்கப்பட்டவர்களுள் சஜித் பிரேமதாச, நவீன் திசாநாயக்க, ஹரின் பெர்னாண்டோ, மனோ கணேசன், எம்.எச்.ஏ ஹலீம், அகிலா விராஜ் கரியவாசம், ரவி கருணநாயக்க மற்றும் கயந்த கருணாதிலகா ஆகியோர் அடங்குகின்றனர்.

புகாரை பதிவு செய்த பின்னர் ஊடகவியலாளர்களை சந்தித்த ட்ரான்ஸ்பரன்சி இன்டர்நெஷனல் நிறுவன நிர்வாக இயக்குனர் அசோகா ஒபியசெகரே சொத்து அறிவிப்பை சமர்ப்பிப்பதற்கான காலக்கெடு ஜூன் 30 என்றாலும், ஆகஸ்ட் 20 வரை எட்டு அமைச்சர்களும் அவ்வாறு செய்யத் தவறிவிட்டனர் என்று கூறினார்.

இதற்கமைய குறித்த அமைச்சர்களுக்கு எதிராக சொத்து மற்றும் பொறுப்பு வெளியீட்டுச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க லஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாக ட்ரான்ஸ்பரன்சி இன்டர்நெஷனல் நிறுவனம் தெரிவித்துள்ளது.