நவராத்திரி விரதம் இன்று ஆரம்பம்

124
124

நவராத்திரி விரதம் இன்று வியாழக்கிழமை ஆரம்பிக்கிறது. மக்கள் தங்கள் வீடுகளில் கொலு வைத்து கொண்டாட இருக்கிறார்கள்.

இந்து பாரம்பரியத்தின் பண்டிகைகளில், நவராத்திரி விரதம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. மகிஷாசுரனுடன் 9 நாட்கள் போரிட்ட அம்பாள், பத்தாவது நாளான தசமியன்று வெற்றி பெற்றார்.

இந்த ஐதீகத்தின்படி, புரட்டாசி மாதம் 9 நாட்கள் நவராத்திரி விரதம் கொண்டாடப்படும். 10-வது நாளான தசமி அன்று விஜயதசமி விழா நடைபெறும். இம்முறை 09 நாட்கள் கொண்டாடப்படவுள்ளது.