மூன்றாம் தரப்பு மத்தியஸ்தம் வேண்டும் – கோட்டாவின் சகாவிடம் இடித்துரைத்த விக்கி!

vikkimullai
vikkimullai

தமிழ் மக்களுக்கு நியாயமான தீர்வு கிடைக்கவேண்டுமென்றால் மூன்றாம் தரப்பு மத்தியஸ்தம் அவசியம் என தமிழ் மக்கள் கூட்டணியின் செயலாளர் நாயகம் க.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

அண்மையில் வட மாகாணத்திற்கு விஜயம் செய்த வடமத்திய மாகாண ஆளுனரான திஸ்ஸ விதாரணவை முன்னாள் முதலமைச்சர் சந்தித்தபோதே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

 ஆட்சிமாற்றத்தின் பின்னர் கோட்டாபயவால் வடமத்திய மாகாண ஆளுனராக நியமிக்கப்பட் திஸ்ஸ விதாரண அதிகாரப்பகிர்வு குறித்து விக்கினேஸ்வரனிம் பேச்சுகக்ளை நடத்தியபோது,

“தமிழ் மக்கள் ஏழு தசாப்தமாக இனப்பிரச்சனைக்கான தீர்வினை கோரி வருகிறார்கள், ஆனால் சிங்கள தலைவர்கள் அது தொடர்பில் இதயசுத்தியுடன் செயற்படுவதாக இல்லை. ஒவ்வொரு தடவையும் வாக்குறுதிகளை அளித்து விட்டு பின்னர் ஏமாற்றியே வந்துள்ளனர். ஆகவே இனியும் நாம் சிங்கள தலைவர்களை நம்புவதற்கு தயாராக இல்லை. இனப்பிரச்சனை தீர்வு குறித்து பேச்சுக்கள் முன்னெடுக்கப்பட வேண்டும். இந்தியா அல்லது மேற்குலகின் மூன்றாம் தரப்பு மத்தியஸ்தம் ஊடாக பேச்சுக்கள் நடந்தால்தான் எமக்கு நியாயமான தீர்வு கிடைத்து, பேச்சு வெற்றியளிக்கும்“ என நீதியரசர் விக்னேஸ்வரன் பதிலளித்துள்ளார்.