மோட்டார் போக்குவரத்து சேவையை விரிவுபடுத்துமாறு ஆலோசனை

4117a7a9 007171f0 motor traffic 850 850x460 acf cropped
4117a7a9 007171f0 motor traffic 850 850x460 acf cropped

மோட்டார் போக்குவரத்துத் துறையின் சேவைகளை மேலும் விரிவுபடுத்துமாறு போக்குவரத்து அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளார்.

அற்கு அமைவாக வாகனப் பதிவு, சாரதி அனுமதிப் பத்திரம் வழங்குதல் மற்றும் வாகனங்களை மாற்றுவது போன்ற ஒரு நாள் சேவைகள் மேலும் விரிவுபடுத்தப்படும்.

தற்போது ஒரு நாள் சாரதி அனுமதிப் பத்திரம் வழங்கும் சேவை வெரஹெரா, ஹம்பாந்தோட்டை மற்றும் அனுராதபுரம் மோட்டார் போக்குவரத்து துறையின் அலுவலகங்களில் மட்டுமே செயலில் உள்ளது.

ஒரு நாள் வாகன பதிவு சேவை நாரஹேன்பிட்டி, கம்பஹா, அனுராதபுரம், ஹம்பாந்தோட்டை, குருணாகல் மற்றும் யாழ்ப்பாணம் அலுவலகங்களில் மட்டுமே உள்ளது. 

இந்த சேவைகளை விரிவுபடுத்தவும், 25 மாவட்டங்களிலும் நிறுவப்பட்ட கிளை அலுவலகங்கள் மூலம் பொதுமக்களுக்கு தேவையான வசதிகளை வழங்கவும் அமைச்சர் உத்தரவுகளை பிறப்பித்தார்.

மின்-மோட்டார் முறையை அமுல்படுத்துதல், மோட்டார் போக்குவரத்துத் துறை மற்றும் தேசிய போக்குவரத்து மருத்துவ நிறுவனம் ஆகியவற்றுக்கு இடையேயான சேவைகளை ஒருங்கிணைப்பது போன்ற திட்டங்கள் விரைவாக செயற்படுத்தப்பட வேண்டும் என்றும்  போக்குவரத்து அமைச்சர் கூறினார்.