ஓமந்தையில் விபத்து ; ஒருவர் படுகாயம்!

IMG 20211010 105645 2 resize 50
IMG 20211010 105645 2 resize 50

வவுனியா – ஓமந்தை பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் வவுனியா மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

IMG 20211010 110735 resize 50


இன்று (10) காலை இடம்பெற்ற இவ்விபத்து பற்றி மேலும் தெரியவருவதாவது,
நெடுங்கேணியில் இருந்து வவுனியா நோக்கி சென்ற முச்சக்கரவண்டி ஓமந்தை பகுதியில் சென்று கொண்டிருந்த போது வீதியின் மறுபக்கமாக திருப்பியுள்ளது. 

IMG 20211010 105938 resize 68


இதன்போது வவுனியாவில் இருந்து ஓமந்தை நோக்கி சென்ற மோட்டார் சைக்கிள் முச்சக்கரவண்டியுடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.

IMG 20211010 105811 resize 65


இவ்விபத்தில் மோட்டார் சைக்கிள் சாரதியான ஓமந்தை மருதோடையை சேர்ந்த 30 வயதுடைய கமல்ராஜ் என்ற இளைஞன் படுகாயமடைந்த நிலையில் வவுனியா பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 
இவ்விபத்து தொடர்பான மேலதிக விசாரணை ஓமந்தை காவற்துறையினரால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.