குகஸ்ரீ குமாரதாஸ மாப்பாண முதலியாரின் மறைவுக்கு நா.உறுப்பினர் விக்கி இரங்கல்

மீண்டும் பேரவையோடு இணைந்துகொள்வார் விக்கி நம்பிக்கை 720x450 1

யாழ்ப்பாணம் நல்லூர் கந்தசுவாமி தேவஸ்தானத்தின் பத்தாவது நிர்வாக அதிகாரியான இரகுநாத குமாரதாஸ் மாப்பாண முதலியார் அவர்களின் மறைவு குறித்த இரங்கல் செய்தியொன்றை மிகவும் ஆழ்ந்த துயரத்தின் மத்தியில் பகிர்ந்து கொள்ளவிழைகின்றேன் என்று யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் நீதியரசர் க வி விக்னேஸ்வரன் இரகுநாத குமாரதாஸ் மாப்பாணமுதலியாரின் மறைவு குறித்த இரங்கல் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்

மேலும் அவ் இரங்கல் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது……

மறைந்த இரகு நாதகுமார தாஸ் மாப்பாண முதலியார் அவர்கள் 1964ஆம் ஆண்டு மார்கழி 1ம் நாள் தொடக்கம் தமது இறுதி மூச்சுவரை நல்லூர் கந்தசுவாமிகோவிலின் பத்தாவது நிர்வாக அதிகாரியாக கடுமையாக உழைத்து தமது 92ஆவது அகவையில் தமது பூவுலக கடமைகளை மனநிறைவுடன் பூர்த்தி செய்துஆறுமுகக் கடவுளின் பாதார விந்தங்களைப் பற்றிச் சென்றுள்ளார்.

அவர் மறைவு எம்மை ஆறா துயரத்தில் ஆழ்த்தியுள்ளது. கடந்த அரை நூற்றாண்டுக்கும் மேலாக கிட்டத் தட்ட 57 வருடங்களாக நல்லூர் கந்த சுவாமி தேவஸ்தானத்தை எந்த வித குறைவுமின்றிஅதன் நிர்வாகத்தை திறம்பட முன்னெடுத்துச் சென்றமை அவரின் நிர்வாகத்திறனை படம் போட்டு காட்டுகின்றது.

அவரின் நிர்வாகத்திறமைக்கு அவரின் இயல்பான நிர்வாக திறமையுடன் இணைந்து அவரின் அடிப்படை கல்வி அறிவு மற்றும் மொழித்திறன் என்பன பக்க பலமாக அமைந்திருந்தன. அவரின் பாரியார் அவருக்குஉற்றதுணையாக இருந்தார்.
அவரின் நிர்வாகத்திறன் அனைவராலும் பாராட்டப்பட்டதொன்று.

ஆலயத்தில் அடியவர்களுடன் தானும் ஓர் அடியவனாக எழிமைத் தோற்றத்தில் காட்சியளித்த அவரின் கண்கள் ஆலயத்தில் நடைபெற்ற அனைத்து விடயங்களையும் ஊன்றி அவதானித்து சீர் செய்யத் தவறியதில்லை. ஆலயத்தினுள் அரசன் தொடக்கம் கடைநிலைஆண்டி வரை சமநிலை உடையவர்கள் என்பதை இறுதி வரை நிலை நிறுத்தியவர். எந்தவொரு பிரமுகரின் வருகைக்காகவோ வேறு எந்தக் காரணங்களுக்காகவோஆலயத்தின் பூஜை வழிபாட்டு நேரங்களில் மாற்றம் விளைவிக்க அவர் அனுமதித்ததில்லை.

தமது குடும்ப அங்கத்தவர்கள் கூட சாதாரண அடியவர்களுடன் சேர்ந்து ஆலய தரிசனத்தை மேற்கொள்ளலாமே தவிர அவர்களுக்கென எந்தவொரு பிரத்தியேக சலுகையையும் வழங்க அவர் அனுமதித்ததில்லை.
அன்னாரின் பிரிவால் கலங்கி நிற்கும் அடியவர்களைஆற்றுப்படுத்தும் தூய பணியில் இளைய எஜமானார் ஆலய நிர்வாகத்தை பொறுப்பேற்று தந்தையின் வழியில் சிறப்பாக முன்னெடுத்துச் செல்கின்றார்.அவருக்குத் தேவையான சக்தியையும் மனப்பலத்தையும் முருகப் பெருமான் அருளவேண்டுமென இறைஞ்சுவதுடன் அன்னாரின் பிரிவால் துயருற்றிருக்கும் அவரின் அன்பு மனைவி உற்றார் உறவினர்கள் அனைவரையும் இப் பெருந்துயரத்திலிருந்து மீள இறைவன் வழி சமைக்கவேண்டும் என்றுபிரார்த்திக்கின்றேன்.-என்றுள்ளது