கர்ப்பிணித் தாய்மார்களுக்கான அறிவித்தல்

pregnancy maternity
pregnancy maternity

கொவிட் நோயால் பாதிக்கப்பட்ட அனைத்து கர்ப்பிணித் தாய்மார்களையும் மருத்துவமனை சிகிச்சை முறைக்கு உட்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.

குடும்ப சுகாதார பணியகத்தின் பணிப்பாளர், வைத்திய நிபுணர் சித்ரமாலி டி சில்வா இதனை தெரிவித்தார்.

தற்போது கொவிட் தொற்றால் பாதிக்கப்பட்ட கர்ப்பிணிப் பெண்களில் எண்ணிக்கை குறிப்பிட்டளவில் குறைவடைந்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

கொவிட் தொற்றுக்கு உள்ளாகும் அனைத்து கர்ப்பிணி தாய்மார்களையும் மருத்துவமனையில் சேர்க்கவும், அவர்களுக்கு சிகிச்சை அளிக்கவும் சுகாதார அமைச்சு தீர்மானித்துள்ளது. எங்கள் மருத்துவமனை அமைப்பு தயாராக உள்ளது. மருத்துவமனைகளில் உள்ள அனைத்து தாய்மார்களையும் எங்களால் கவனித்துக் கொள்ள முடியும்.- என்றார்