இலங்கை தொடர்ந்தும் சர்வதேச நாணய நிதியத்தை நாட வேண்டிய அவசியமில்லை

1631687282 1631673206 ajith L
1631687282 1631673206 ajith L

இலங்கை தொடர்ந்தும் சர்வதேச நாணய நிதியத்தை நாட வேண்டிய அவசியமில்லையென மத்திய வங்கியின் ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால் தெரிவித்துள்ளார்.

ப்ளும்பெர்க் (Bloomberg)தொலைக்காட்சி சேவைக்கு வழங்கிய செவ்வியிலே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளர்.

சர்வதேச நாணய நிதியத்தின் ஒத்துழைப்பின்றி வெளிநாட்டு கடனை மீளச் செலுத்தும் முறைமையை முகாமைத்துவப்படுத்த இலங்கைக்கு இன்னும் வாய்ப்பிருப்பதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அத்துடன் எதிர்காலத்தில் நாட்டின் வெளிநாட்டு ஒதுக்கத்தை வலுப்படுத்துவதற்காகப் பல துறைகளில் நிதி வழங்கல்களை மேற்கொள்ளவுள்ளதாக மத்திய வங்கியின் ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால் தெரிவித்துள்ளார்.