நீர் கொழும்பில் பெண் ஒருவர் மீது தாக்குதல்

fdf
fdf

நீர்கொழும்பு – கிம்புலாபிட்டிய பகுதியில் நபரொருவரினால் தாக்கப்பட்ட பெண்ணொருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.

அயல் வீட்டாரிடையே ஏற்பட்ட வாக்குவாதம் கைகலப்பாக மாறிய நிலையில் இந்த தாக்குதல் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இந்நிலையில், சம்பவத்தில் காயமடைந்த பெண் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன் தாக்குதலை மேற்கொண்டதாக கருதப்படும் சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.