பாலின் விலையும் அதிகரிக்கப்பட வேண்டும் – பால் உற்பத்தியாளர்கள் வேண்டுகோள்

201903011403371175 milk products effects SECVPF
201903011403371175 milk products effects SECVPF

ஒரு லீற்றர் திரவ பாலை குறைந்தபட்சம் 120 ரூபாவாக அதிகரிக்க வேண்டும் என பால் உற்பத்தியாளர்களைப் பாதுகாக்கும் தேசிய மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

அதன் தலைவர் சுசந்த குமார நவரத்ன இந்தக் கோரிக்கையை விடுத்துள்ளார்.

பால் உற்பத்திக்கான செலவு அதிரித்துள்ளமையினால்,  உள்நாட்டு பால்மாவின் விலையும் அதிகரிக்கப்பட்டது.

எனவே, குறித்த லாபம் பால் உற்பத்தியாளர்களுக்கும் வழங்கப்பட வேண்டும் என அவர் குறிப்பிட்டார்.

தங்களுக்கு ஒரு லீற்றர் திரவ பாலுக்கு 80 முதல் 100 ரூபா வரையிலேயே வழங்கப்படுவதாகவும் பால் உற்பத்தியாளர்களைப் பாதுகாக்கும் தேசிய மத்திய நிலையத்தின் தலைவர் குறிப்பிட்டுள்ளார்.