முல்லைத்தீவில் இரண்டு வீதிகளின் புனரமைப்பு பணிகளை ஆரம்பித்து வைத்தார் – மஸ்தான்

Kadhar Mastan 850x460 acf cropped
Kadhar Mastan 850x460 acf cropped

ஜனாதிபதி அவர்களின் விஷேட வீதி அபிவிருத்தி வேலைத்திட்டத்தின் கீழ் நாடு தழுவிய ரீதியில் மேற் கொள்ளப்படுகின்ற  ஒரு இலட்சம் வீதி அபிவிருத்தி வேலைத்திட்டத்தினூடாக முல்லைத்தீவு மாவட்டத்தில் தெரிவு செய்யப்பட்ட இரண்டு வீதிகளின் புனரமைப்பு பணிகள் இன்று ஆரம்பித்து வைக்கப்பட்டது.

வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் மன்னார் மற்றும் முல்லைத்தீவு மாவட்ட அபிவிருத்திக் குழுத் தலைவருமான காதர் மஸ்தான் அவர்களிடம் கொக்குத்தொடுவாய் நல்லதண்ணி ஓடை மக்கள் விடுத்த வேண்டுகோளை ஏற்று தெரிவு செய்யப்பட்ட குறித்த இரண்டு வீதிகளின் புனரமைப்பு பணிகள் இன்று ஆரம்பித்து வைக்கப்பட்டது. அந்தவகையில் முல்லைத்தீவு கொக்குத்தொடுவாய் கிராம சங்க பகுதிக்கான 1 கிலோமீற்றர் நீளமான காபட் வீதி புனரமைப்பதற்கான ஆரம்ப நிகழ்வு  வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் மன்னார் மற்றும் முல்லைத்தீவு மாவட்ட அபிவிருத்திக் குழுத் தலைவருமான காதர் மஸ்தான் அவர்களினால் உத்தியோகப்பூர்வமாக இன்று (15.10.2021) மாலை 5.00 மணியளவில் ஆரம்பித்துவைக்கப்பட்டது.

 இந்நிகழ்வில் பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள், கிராம மக்கள், கட்சி ஆதரவாளர்கள், நாடாளுமன்ற உறுப்பினரின் இணைப்பாளர்கள்  எனப் பலரும் கலந்து கொண்டிருந்தனர். இதனைத் தொடர்ந்து முல்லைத்தீவு நல்லதண்ணி ஓடை  பகுதிக்கான 1.4கிலோமீற்றர் நீளமான காபட்  வீதி புனரமைப்பதற்கான ஆரம்ப நிகழ்வினையும் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் மன்னார் மற்றும் முல்லைத்தீவு மாவட்ட அபிவிருத்திக் குழுத் தலைவருமான காதர் மஸ்தான் இன்று (15.10.2021) மாலை 6 மணியளவில் ஆரம்பித்து வைத்தார்.

குறித்த நிகழ்விலும் பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள்,கிராம மக்கள், கட்சிஆதரவாளர்கள், நாடாளுமன்ற உறுப்பினரின் இணைப்பாளர்கள்  எனப் பலரும் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.