அரசாங்கத்தின் நடைமுறை செயற்பாடுகளில் ஒரு சில குறைபாடுகள் உள்ளன – தயாசிறி

dhaya1
dhaya1

சேதன பசளை திட்டத்தை அறிமுகப்படுத்திய கல்வியியலாளர்கள் காணாமல் போயுள்ளார்கள். சேதன பசளை திட்டத்தினால் விவசாயிகள் பெரும் பாதிப்புக்களை எதிர்க்கொண்டுள்ளார்கள்.

இப்பிரச்சினைக்கு விரைவில் தீர்வு வழங்குமாறு அரசாங்கத்திடம் வலியுறுத்தியுள்ளோம் என பத்திக் மற்றும் கைத்தரி, தேசிய ஆடை உற்பத்தி இராஜாங்க அமைச்சர் தயாசிறி ஜயசேகர தெரிவித்தார்.

குளியாப்பிட்டி பகுதியில் இடம்பெற்ற நிகழ்வில் கலந்துகொண்டு கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு அவர்,

விவசாயிகளின் போராட்டம் தீவிரமடைந்துள்ளது. சேதன பசளை திட்டம் சிறந்ததாக காணப்பட்டாலும் அது தற்போது பெரும் சவாலாக மாறியுள்ளது.

சேதன பசளை திட்டத்தை முழுமையாக செயற்படுத்தி எந்த நாடும் விவசாயத்துறையில் வெற்றிப்பெறவில்லை.

இரசாயன உரம் இறக்குமதி செய்யப்பட்டமையினால் விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளார்கள். இப்பிரச்சினைகளுக்கு விரைவில் தீர்வு வழங்கவேண்டும் என அரசாங்கத்திடம் வலியுறுத்தியுள்ளோம்.

மாகாண சபை தேர்தலை நடத்த அரசாங்கம் உரிய நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளது.

சுதந்திர கட்சி முழுமையான ஒத்துழைப்பு வழங்கும். மாகாண சபை தேர்தல் தற்போதைய சமூக பிரச்சினைக்கு ஒரு தீர்வாக அமையும். ஒரு நாடு – ஒரு சட்டம் என்ற கொள்கையிற்கு அமைய புதிய அரசியலமைப்பு உருவாக்கப்படவுள்ளது.

இனத்தை அடிப்படையாகக் கொண்டு நடைமுறையில் உள்ள சட்டங்களினால் பல பிரச்சினைகள் தோற்றம் பெற்றுள்ளன.

அரசாங்கத்தின் நடைமுறை செயற்பாடுகளில் ஒரு சில குறைபாடுகள் உள்ளன.

குறைபாடுகளை சுட்டிக்காட்டுவது அரசாங்கத்திலிருந்து வெளியேறுவதற்கல்ல.

மக்கள் வழங்கிய ஆணையை முறையாக செயற்படுத்த வேண்டும் என்பதற்காகவே குறைகளை சுட்டிக்காட்டுகிறோம்.

அரசாங்கத்திற்கு எதிராக சுதந்திர கட்சியினர் சூழ்ச்சி செய்வதாக பொதுஜன பெரமுனவின் உறுப்பினர்கள் குறிப்பிட்டுக்கொள்வது அவர்களின் அரசியல் அறியாமையினை வெளிப்படுத்தியுள்ளது என்றார்.