முஸ்லிம் சமூகத்தினால் தெல்லிப்பளை வைத்தியசாலைக்கு மின் உபகரணங்கள் கையளிப்பு!

IMG 20211017 WA0099
IMG 20211017 WA0099

யாழ்ப்பாணம் தெல்லிப்பளை ஆதார வைத்தியசாலையின் புற்றுநோய் சிகிச்சைப் பிரிவிற்குட்பட்ட பகுதியில் யாழ்ப்பாணம் ஜனாசா நலன்புரி அமைப்பின் ஏற்பாட்டில் சிரமதானம் ஒன்று இன்றைய தினம் (17) முன்னெடுக்கப்பட்டுள்ளது.

மேலும் வைத்தியசாலையின் பிரேத அறை அமைந்துள்ள தொகுதிக்குத் தேவையான மின்குமிழ் உள்ளிட்ட தொகுதிகளும் அன்பளிப்புச் செய்யப்பட்டது. இந் நிகழ்வுகளுக்கான அனுசரணையினை யாழ்ப்பாணம் பெரிய பள்ளிவாயல் நிர்வாகம் மேற்கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.

இச் சிரமதானம் பணிகளில் யாழ்ப்பாணம் ஜனாசா நலன்புரி அமைப்பின் தலைவர், நிர்வாக உறுப்பினர்கள், யாழ்ப்பாணம் முஸ்லிம் சமூகப் பிரதிநிதிகள் உள்ளிட்டவர்களுடன் வைத்தியசாலையின் ஊழியர்கள் மற்றும் சுகாதாரப் பிரிவினரும் என பலர் கலந்து கொண்டிருந்தமை விசேட அம்சமாகும்.