ஓமான் அணி 10 விக்கெட்டுக்களால் வெற்றி!

E53X8ljX0AAuEBF 1024x683 1
E53X8ljX0AAuEBF 1024x683 1

சர்வதேச உலக கிண்ண இருபதுக்கு 20 தொடரின் பப்புவா நியூகினியாவுக்கு எதிரான முதலாவது போட்டியில் ஓமான் அணி 10 விக்கெட்டுக்களால் வெற்றிபெற்றுள்ளது.

போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற ஓமான் அணி முதலில் களத்தடுப்பை தேர்வு செய்தது.

இதற்கமைய, முதலில் துடுப்பெடுத்தாடிய பப்புவா நியூகினியா நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 9 விக்கட்டுக்களை இழந்து 129 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது.

இந்நிலையில் 130 என்ற வெற்றியிலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய ஓமான் அணி 13.4 ஓவர்கள் நிறைவில் விக்கெட் இழப்பின்றி வெற்றியிலக்கை கடந்தது.