அடிப்படைச் சுகாதார வசதிகளைச் செய்துகொள்வதற்கான காசோலைகள் கிழக்கு மாகாண ஆளுநரால் வழங்கி வைப்பு

silva
silva

ஏறாவூர் நகர பிரதேச செயலகத்தில் இன்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் மட்டக்களப்பு மாவட்டத்திலிருந்து தெரிவு செய்யப்பட்ட தமிழ், முஸ்லிம், சிங்கள சமூகங்களைச் சேர்ந்த 150 குடும்பங்களுக்கு அடிப்படைச் சுகாதார வசதிகளைச் செய்துகொள்வதற்கான காசோலைகள் கிழக்கு மாகாண ஆளுநர் ஷான் விஜயலால் டி சில்வாவினால் நேற்று வழங்கி வைக்கப்பட்டன.

இந்நிகழ்வில் கலந்துக்கொண்டு ஆளுநர் உரையாற்றும் போது

இந்த நாட்டில் சிங்கள,தமிழ்,முஸ்லிம் மக்கள் நீண்ட காலமாக ஒற்றுமையுடனும், சகவாழ்வுடனும், பரஸ்பர ஒத்துழைப்புடனும் வாழ்ந்து வந்த வரலாறுகள் இருக்கின்றன. எதிர்கால சந்ததிக்கு இன, மத பேதங்கள் கடந்த சமாதான தேசத்தைக் கையளிக்க வேண்டும். அந்த சமாதானத்தை வாய்ச்சொல் அளவில் மாத்திரம் கடைப்பிடிக்காமல் செயலில் கொண்டு வருவதற்கு முயற்சிக்க வேண்டும். அமைதியற்ற ஆட்சியை மக்கள் ஒருபோதும் விரும்புவதில்லை. இப்பொழுது எனக்கு கிழக்கு மாகாணத்தில் மூவின மக்களோடு மக்களாகச் சேர்ந்து கருத்துப் பரிமாறக் கிடைத்த சந்தர்ப்பத்தையிட்டு நான் பெருமையடைகின்றேன்.

நாட்டிலுள்ள அனைத்து இன, சமூக மக்களிலும் பெரும்பாலானோர் இன வன்முறைகளையும், பயங்கரவாதத்தையும் விரும்பவில்லை என கிழக்கு மாகாண ஆளுநர் ஷான் விஜயலால் டி சில்வா தெரிவித்துள்ளார்.

எதிர்காலத்தில் குறிப்பாக அடுத்த வருடமளவில் அதிகளவான பொதுச் சேவைகளை இந்த மாகாணத்திலுள்ள அனைத்து சமுகத்தாருக்கும் செய்ய முடியுமென நான் உறுதி கூறுகின்றேன் எனவும் தெரிவித்துள்ளார்.