6கோடி செலவில் கண்காட்சி இப்போது தேவை தானா?:ச.மதிராஜ்

vlcsnap 2019 09 11 10h18m27s492
vlcsnap 2019 09 11 10h18m27s492

இன்றய அரசியல் நாடக ஆட்டங்களில் கலந்து கொள்ளவும் வேடிக்கைபார்க்கவும் கழியாட்ட நிகழ்வுகளில் மகிழ்ச்சியுடன் கலந்துகொண்டு எமது இளமையை சுவைக்க எமக்கும் ஆசைதான்.. ஆனால் உங்கள் வியர்வையில் நனைந்த வரிப்பணங்களில் கழியாட்டத்தை கொண்டாட சுதேச மக்கள் கட்சியினராகிய நாம் ஒருபோதும் இடமளிக்கப்போவதில்லை என கட்சியின் செயலாளர் ச.மதிராஜ் தெரிவித்தார்.

யாழ் ஊடக அமையத்தில் நடத்திய பத்திரிகையாளர் சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

பொய்ப்பித்தலாட்டங்களினாலும் பெய்யான வாக்குறுதிகளாலும் வாக்கு மாறிய பேச்சினாலும் பொறுப்புக்கூறாமையினாலும் தமிழர்கள் ஆகியநாம் எமது தலைமைகளிடமும் பெரும்பாண்மை சமூகத்திடமும் உலக வல்லாதிக்க சத்திகளிடமும் சிக்குண்டு நட்டாற்றில் தள்ளப்பட்டுள்ளோம். எமது உரிமைகள் ஒருபுறம் இருக்க உரிமைகளை கோருவதற்கு பலமான சத்திகள் இல்லாத ஒரு தசாப்தகால வெற்றிடம்.

நாம் இப்படியே தான் இருக்கப்போகிறோமா??

எமக்கு அடிப்படையான ஒரு சில உரிமைகளைக்கூட அனுபவிக்கமுடியாது காணப்படுகின்றதே. வரலாறு எமக்கு நல்ல வழிகாட்டிகளை தந்திருந்தது. அவர்களின் பாதைகளில் கற்றுக்கொண்ட பாடங்கள் இன்று பிரயோகிக்கப்படாமல் காணப்படுகின்றது. வலிகளை மட்டுமே தமிழர்களாகிய நாம் மனங்களில் சுமக்கின்றோம். எமக்கு மட்டுமேன் இந்த இழி நிலை..

2015 இற்கு முன்னய ஆட்சிக்காலத்திலே ஒரு தனி குடும்பம் நாட்டினது சொத்துக்களை உறிஞ்சியது. இது சர்வதிகாரத்திற்கு வித்திடும் என்றார்கள். தமிழர் தரப்பின் ஆதரவுடன் நல்லாட்சி என்ற சொற்பதத்திலே ஆட்சியை மாற்றினோம். இதுவரை வரலாற்றில் நல்லாட்சிக்கான இப்படி ஒரு வரைவிலக்கணத்தினை நீங்கள் ஒருபோதும் பார்த்திருக்க மாட்டீர்கள்.

ஒரு ஆங்கில திரைப்படம் பார்த்ததுபோல உணர்வு இன்றுடன் 1683 நாட்கள் அதிமேதகு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனாவினுடைய ஆட்சி காலத்திலே கழிந்து ஓடிவிட்டது..

ஆட்சி மாற்றம் பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை, ஒருநாடு இரு பிரதமர், யாப்புமீறல், தொடர் தற்கொலை, குண்டுத்தாக்குதல் என உலகநாட்டவர்கூட கண்டிராத பல வேடிக்கைகளையும் உயிரை உலுப்பிய ஈனச்செயல்களையும் கண்டோம். நொந்தோம். கொப்பழித்தோம்.

2018 சித்திரை 15 சுதேச மக்கள் கட்சி என்கிற பெயரில் நடிகர்களினது ஆட்டம் ஆரம்பிப்பதற்கு முன்பே எமது மக்களினதும் எதிர்கால இளஞர்களினதும் நலனுக்காய் இளஞர்களை கொண்டு புதிதாக ஒரு கட்சியை ஒழுங்கு படுத்தவேண்டிய நிர்ப்பந்தத்திற்கு காலம் எம்மைத்தள்ளியது.

இன்று 4000 உறுப்பினர்களைக்கொண்டு அடிப்படை பிரச்சனைகளிற்கு குரல் கொடுக்கும் அரசியல் சார்ந்து மக்களை விளிப்படைய செய்யவும் மக்களது பூரண விருப்பிற்கு ஏற்ப மக்களோடு மக்களாய் சுதேச மக்கள் கட்சியினராகிய நாம் அரசியல் சார்ந்த நடவடிக்கையில் என்றும் உண்மைத் தன்மையுடன் களத்தில் இருப்போம்.

கடந்த ஆட்சிக் காலங்களில் சிறுவர்களிற்கான காப்புறுதி மற்றும் பாடசாலை மாணவர்களிற்கான சீருடை வழங்கல் என்பவற்றில் ஊழல், மத்தியவங்கி பிணைமுறி அதில் பாரிய மோசடி. மக்களிற்காக அரசாங்கம் என்கிற நிலைமாறி ஆட்சியாளர்கள் தமது சுயமான போக்கிலே ஆட்சியை செலுத்துகின்றனர்.

இத்தனை காலமும் எமது மக்கள் வீதிகளில் போராடும்போது மாற்றுபாதையை பயன்படுத்தியவர்கள் மக்களின் நலனை கண்டு கொள்ளாது இருந்தவர், இன்று தமது பதவிகளை தக்க வைத்துக்கொள்ள உளவியல் சூழ்ச்சிகள், தந்திரங்கள், வியூகங்கள் என அனைத்தையும் தமிழர் தாயகப்பரப்புக்களை நோக்கி திருப்பி உள்ளனர்.

6கோடி செலவில் கண்காட்சி இப்போது தேவை தானா??

வடக்கு கிழக்கில் இராணுவத்தினால் சுபீகரிக்கப்பட்ட நிலங்கள். 25,000 ற்கும் அதிகமானவர்கள் வடக்கில் காணிகள் இருந்தும் வீடு அற்று இருக்கின்றனர். நாடு முளுதும் தேசிய அடையாள அட்டை இன்றி 5000பேர் இருக்கின்றனர். ஒரு தசாப்தத்திற்கு மேலாக தமிழர் பிரதிநிதிகள் சர்வதேசம் இவற்றை எல்லாம் வேடிக்கைபார்த்து தொடர் மௌனம்.

ஐக்கிய இலங்கைக்குள் ஒட்டுமொத்த மக்களது வறுமைக்கு, பொருளாதார விலை ஏற்றத்திற்கு, வேலை இன்மைக்கு, தூய நீரிற்கு, சுத்தமான காற்றிற்கு, சுகாதாரத்திற்கு, மக்கள் இழந்த நிலத்திற்கு, காணாமல் ஆக்கப்பட்ட உறவினர்களிற்கு இவற்றிக்கு எல்லாம் தற்போதய ஆட்சியாளர்களும் இனிவரும் ஆட்சியாளர்களும் எந்த பதிலும் கூறவிடப்போவதில்லை.

உதாரணமாக காணமல் ஆக்கப்பட்ட உறவினரிற்கு 6000 ரூபா இழப்பீடு. அங்கு பணிபுரியும் ஊளியர்களிற்கு பதிவாளர்களிற்கு இலட்ச கணக்கில் சம்பளம். பல்லவராஜன் கட்டு மக்களிற்கு இன்னமும் அடிப்படை வசதிகள் செய்து கொடுக்கப்படவில்லை.

எனவே எம் அன்பிற்கினிய தாய்தமிழ் உறவுகளே!! மாற்றம் எமது மனங்களிலில் இருந்து உதிக்கவேண்டும். எமது உரிமைகளை நாம் அடிமைத்தனத்தினூடாக பெறமுடியாது என்றார்.