வவுனியாவில் பேருந்து விபத்து; ஒருவர் ஆபத்தான நிலையில்

20191230 063214
20191230 063214

வவுனியா ஈரப்பெரியகுளத்தில் இன்று அதிகாலை இடம்பெற்ற பேருந்து விபத்தில் 4 இராணுவத்தினர் உட்பட 12 பேர் காயமடைந்தனர்.

இந்த விபத்து இன்று (திங்கட்கிழமை) அதிகாலை 4 மணியளவில் இடம்பெற்றதாக ஈரப்பெரியகுளம் பொலிஸார் தெரிவித்தனர்.

காயமடைந்தவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன் ஒருவர் ஆபத்தான நிலையில் அவசர சிகிச்சைக்காக கொழும்புக்கு அனுப்பிவைப்பட்டார்.

தங்கல்லையில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த பேருந்தொன்று கட்டுப்பாட்டை இழந்து மின்கம்பத்துடன் மோதுண்ட பேருந்து குடைசாய்ந்ததில் இந்த விபத்து இடம்பெற்றது.

இதன் போது பேருந்தில் பயணித்தவர்களில் 4 இராணுவத்தினர் உட்பட 12 பேர் காயமடைந்துள்ளனர்.

இந்த விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை ஈரப்பெரியகுளம் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.