இலங்கை கடற்பரப்பில் உயிரிழந்த தமிழக மீனவருக்கு நட்டஈடு கோரி ஆர்ப்பாட்டம்!

202102261906087784 Demonstration by the Grama Niladhari Association demanding SECVPF
202102261906087784 Demonstration by the Grama Niladhari Association demanding SECVPF

யாழ்ப்பாணம் – கோவிலம் பகுதியில் அண்மையில் அனர்த்தத்திற்கு உள்ளான தமிழக படகிலிருந்து வீழ்ந்து காணாமல் போன நிலையில் சடலமாக மீட்கப்பட்டவருக்கு நட்டஈடு வழங்க வேண்டும் என வலியுறுத்தித் தமிழகம் – ராமேஸ்வரம், தங்கச்சிமடம் மீனவர்கள் ஆர்ப்பாட்டம் ஒன்றினை முன்னெடுத்தனர்.

யாழ்ப்பாணம் – கோவிலம் கலங்கரை விளக்கத்திற்கு அருகில் உள்ள கடற்பரப்பில் இந்திய படகொன்று கவிழ்ந்து அனர்த்தத்திற்கு உள்ளானதில் காணாமல்போன ராஜ்கிரண் என்ற தமிழக மீனவர் சடலமாக மீட்கப்பட்டார்.

குறித்த கடற்பரப்பில் கடந்த தினம், பல இந்திய படகுகள் அத்துமீறி மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்தன.

இதன்போது, கடற்படையினரால் சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்ட சந்தர்ப்பத்தில், படகு ஒன்று கவிழ்ந்து விபத்திற்கு உள்ளான நிலையில், அதில் இருந்த ஒருவர் காணாமல்போனதுடன், மேலும் இரண்டு பேர் மீட்கப்பட்டு கைது செய்யப்பட்டனர்.

இந்த நிலையில் இந்திய மீனவர் உயிரிழந்தமை தொடர்பில் இலங்கை அரசாங்கத்திற்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என ராமேஸ்வரம் தங்கச்சிமடம் மீனவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

அத்துடன் உயிரிழந்த குறித்த இந்திய மீனவரின் குடும்பத்திற்கு நட்ட ஈடாக ஒரு கோடி ரூபா வழங்கப்பட வேண்டும் எனவும் அவர்கள் கோரியுள்ளனர்.

இந்திய – இலங்கை மீனவர் நல்லிணக்க பேச்சுவார்த்தை மீண்டும் ஆரம்பிக்கப்பட்டு மீனவர் வாழ்வுரிமைப் பாதுகாப்பு சட்டம் கொண்டு வரப்பட வேண்டும் என வலியுறுத்தி ராமேஸ்வரம், தங்கச்சிமடம் மீனவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்ததாக அந்த நாட்டு தகவல்கள் தெரிவிக்கின்றன.