பார்படோஸ் குடியரசின் புதிய ஜனாதிபதியாக டேம் சாண்ட்ரா மேசன் தெரிவு!

121160801 gettyimages 937007404
121160801 gettyimages 937007404

பார்படோஸ் ஒரு குடியரசாக மாற்றப்படுகின்ற நிலையில் அதன் முதலாவது ஜனாதிபதி நியமிக்கப்படுகிறார்.

எலிசபத் மஹாராணியை அந்த நாட்டின் அரசத் தலைவர் பதவியிலிருந்து நீக்கிப் புதிய ஜனாதிபதியாக டேம் சாண்ட்ரா மேசன் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

பிரித்தானியாவிடமிருந்து பார்படோஸ் சுதந்திரம் அடைந்த 55ஆவது ஆண்டு நிறைவு நிகழ்வு எதிர்வரும் நவம்பர் மாதம் 30ஆம் திகதி இடம்பெறவுள்ளது.

அன்றைய தினம் 72 வயதான டேம் சாண்ட்ரா மேசன் புதிய ஜனாதிபதியாகப் பதவியேற்கவுள்ளார்.

பார்படோர்ஸின் மேன்முறையீட்டு நீதிமன்றில் நீதிபதியாகக் கடமையாற்றிய அவர் 2018ஆம் ஆண்டு காலப்பகுதியில் ஆளுநராகக் கடமையாற்றியிருந்தார்.

இந்தநிலையில் காலனித்துவ ஆட்சியில் இருந்த பார்படோஸ் குடியரசாக நிலைக்கும் திட்டத்தைக் கடந்த ஆண்டு அறிவித்திருந்தது.

2 லட்சத்து 85 ஆயிரம் மக்கள் தொகையைக் கொண்ட பார்படோஸ் கரீபியன் தீவுகளில் ஒன்றாக உள்ளது.

சீனி ஏற்றுமதியை பிரதான வருமானமாகக் கொண்டுள்ள பார்படோஸ் தற்போது சுற்றுலாத்துறையிலும் வளர்ச்சியடைந்துள்ளது.