யாழில் பெண் அரசியல் பிரதிநிதிகளுக்கு விசேட பயிற்சி

20211022 110149
20211022 110149

யாழ்ப்பாண மாவட்டத்தில் உள்ளூராட்சி மன்றங்களின் பெண் அரசியல் பிரதிநிதிகளுக்கு விசேட பயிற்சி வழங்கும் செயலமர்வு இடம்பெற்றது.

ஜரோப்பிய ஒன்றியத்தின் நிதிப் பங்களிப்பில் “சேர்ச் போ கொமன் கிரவுண்ட்” என்ற சர்வதேச தன்னார்வ அமைப்பு மற்றும் மகளிர் அபிவிருத்தி நிலையத்தின் ஏற்பாட்டில் யாழ்ப்பாணத்தில் உள்ள தனியார் விடுதி ஒன்றில் இன்று காலை 9 மணிக்கு இடம்பெற்ற நிகழ்வில்,

உள்ளுராட்சி மன்ற பெண் பிரதிநிதிகள் மற்றும் ஊடகவியலாளர்கள் கலந்து கொண்டதுடன் விசேடமாக ஐரோப்பிய ஒன்றியத்தின் இலங்கைக்கான தூதுவர்

டெனிஸ் சைபி மற்றும் ஜரோப்பிய ஒன்றியத்தின் அதிகாரிகள் சிலரும் கலந்து கொண்டனர்.