அரச புலனாய்வு சேவை பணிப்பாளர் சிஐடியில் முறைப்பாடு!

47dc86fc 867872ed rev. fr 1 850x460 acf cropped
47dc86fc 867872ed rev. fr 1 850x460 acf cropped

ஏப்ரல் 21 தாக்குதல் தொடர்பில் அருட்தந்தை சிறில் காமினி உள்ளிட்ட தரப்பினர் முன்வைத்த குற்றச்சாட்டை நிராகரித்து அரச புலனாய்வு சேவையின் பணிப்பாளர் நாயகம் மேஜர் ஜெனரல் சுரேஸ் சலே குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.

2019ஆம் ஆண்டு இடம்பெற்ற ஏப்ரல் 21 தாக்குதல் தொடர்பில் முன்வைக்கப்பட்டுள்ள பல குற்றச்சாட்டுக்களுக்கு எதிர்ப்பு வெளியிட்டு அவர் இந்த முறைப்பாட்டினை முன்வைத்துள்ளார்.

அந்த பயங்கரவாத தாக்குதலுக்கு தலைமைத்துவம் வகித்த தேசிய தௌஹீத் ஜமாத் அமைப்பின் தலைவர் சஹ்ரான் ஹாசிமுக்கு, புலனாய்வு பிரிவினால் நிதி மற்றும் ஏனைய உதவிகள் வழங்கப்பட்டதாக கடந்த 23ஆம் திகதி அருட்தந்தை சிறில் காமினி தெரிவித்திருந்ததாக அந்த முறைப்பாட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது.