எந்தவொரு தருணத்திலும் இலங்கைக்கு உதவுவோம் – ஜப்பானிய தூதுவர்

WhatsApp Image 2021 10 25 at 1.47.54 PM
WhatsApp Image 2021 10 25 at 1.47.54 PM

இரு நாடுகளுக்கு இடையிலான நட்புறவை பலப்படுத்திக்கொண்டு, தேவைப்படும் எந்தவொரு தருணத்திலும் இலங்கைக்கான ஒத்துழைப்பு வழங்கத் தான் முயற்சிப்பதாக தனது சேவைக் காலத்தை நிறைவு செய்துள்ள இலங்கைக்கான ஜப்பானிய தூதுவர் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிடம் தெரிவித்தார்.

தனது சேவைக் காலத்தை முடித்துக்கொண்டு நாடு திரும்பவுள்ள இலங்கைக்கான ஜப்பானியத் தூதுவர் சுகியாமா அக்கிரா ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை இன்று திங்கட்கிழமை ஜனாதிபதி அலுவலகத்தில் சந்தித்து கலந்துரையாடினார். இதன் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

ஆறு இலட்சம் அஸ்ட்ரசெனிக்கா தடுப்பூசிகளை ஜப்பானிலிருந்து பெற்றுக்கொள்வதற்கும் கொவிட் தொற்றொழிப்பை வெற்றிகரமாக்கிக் கொள்வதற்கும், தூதுவரால் பல்வேறு வழிமுறைகளில் இந்நாட்டுக்குப் பெற்றுக் கொடுக்கப்பட்ட சேவைகளுக்கு, ஜனாதிபதி இதன்போது பாராட்டுத் தெரிவித்தார்.

இரு நாடுகளுக்கு இடையிலான நட்புறவை பலப்படுத்திக்கொண்டு, தேவைப்படும் எந்தவொரு தருணத்திலும் இலங்கைக்கான ஒத்துழைப்பு வழங்கத் தான் முயற்சிப்பதாக, ஜனாதிபதியிடம் ஜப்பான் தூதுவர் தெரிவித்தார்.