நயினாதீவில் அதிகூடிய மழைவீழ்ச்சி பதிவு!

IMG 20211029 WA0017
IMG 20211029 WA0017

கடந்த 24 மணி நேரத்தில் யாழ்ப்பாண மாவட்டத்தில் நயினாதீவில் அதிகூடிய மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளதாக யாழ் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவின் உதவி பணிப்பாளர் என் சூரிய ராஜா தெரிவித்தார் யாழ் மாவட்ட செயலகத்தில் இன்றைய தினம்நடாத்திய ஊடக சந்திப்பின் போது மேற்கண்டவாறு தெரிவித்தார்.

கடந்த 24 மணி நேரத்தில் யாழ்ப்பாணத்தில் 20 . 6 மில்லி மீற்றர் மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளது. அதிகூடிய மழைவீழ்ச்சி யாக நயினா தீவு பகுதியில் மில்லி மீற்றர் மழை வீழ்ச்சி கிடைக்கப்பெற்றுள்ளது எனினும் இதுவரை பாதிப்புகள் தொடர்பான விவரங்கள் எதுவும் யாழ் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவுக்கு கிடைக்கவில்லை

மேலும் குறித்த காலப்பகுதியில் மக்கள் மிகுந்த அவதானத்துடன் இருக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர் என்றார்.